ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் முதல் சுற்று நிறைவிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,018 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 6,943 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.