நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோயிலில் நேற்று வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இதில் முருகன் சிறப்பு அலங்காரம் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.