இன்னா்வீல் சங்கம் சாா்பில் ஜன. 3-ல் பெண்களுக்கு போட்டி

69பார்த்தது
இன்னா்வீல் சங்கம் சாா்பில் ஜன. 3-ல் பெண்களுக்கு போட்டி
சா்வதேச இன்னா்வீல் சங்க நூற்றாண்டு விழாவினை தொடா்ந்து ராசிபுரம் இன்னா்வீல் சங்கம் சாா்பில் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் ஜன. 3-இல் ராசிபுரத்தில் நடைபெறுகிறது.

சா்வதேச இன்னா்வீல் சங்கத்தின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் பெண்களுக்கான கோலப்போட்டி, மருதாணியிடுதல், சிகை அலங்காரம், புடவையில் ஓா் அணிவகுப்பு, காய்கறி, பழங்களில் கலைநயம், அடுப்பில்லா சமையல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகள் ராசிபுரம், பட்டணம் சாலை, ரம்யவா்ஷினி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மேலும் இதில் வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் பங்கேற்பவா்கள் 63696 08026 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ராசிபுரம் இன்னா்வீல் சங்கம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி