நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் நேற்று (செப்.14) முன்தினம் மதியம் சுமார், 35 வயதுடையவர் தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலத்தின் மீது செல்லும் போது, வண்டி சீட்டில் படுத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றார்.
எதிரே வாகனம் வரும்போது அவர் எழுந்துக்கொள்கிறார். இதை பின்னால் வந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ நேற்று(செப்.13)சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஹெல்மெட் போடாமல் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டி சென்றதால் ராசிபுரம் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடிவந்தனர்.
இந்நிலையில் விசாரணையில் ராசிபுரம், சிவானந்தாசாலையை சேர்ந்த பாக்கியசெல்வன் மகன் ஜெபதுரை, (35) என்பது தெரிந்தது உடனே போக்குவரத்து ஆய்வாளர் நடராஜன், ஆபத்தாக வண்டி ஓட்டிய ஜெபதுரைக்கு, 8200 ரூபாய் அபராதம் விதித்ததுடன் அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர். டி. ஓக்கு பரிந்துரை செய்துள்ளார்.