நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்று மார்கழி மாத பஜனை நிறைவு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோதண்டராமர், ஆண்டாள், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு மிக்க பூஜையை சிறப்பித்தனர்.