கர்நாடகா: பாஜக மகளிர் அணியின் பொதுச்செயலாளராக மஞ்சுளா (42) என்பவர் இருந்தார். சில நாட்களுக்கு முன் அவரது கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில், "நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி இல்லை. எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் கிடையாது" என எழுதியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.