2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி முன்னேறும் விஜய்க்கு செக் வைக்கும் வகையில் கமல்ஹாசனை ஆயுதமாக பயன்படுத்த திமுக திட்டமிட்டு வருகிறதாம். உதயநிதியின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தவெகவுக்கு எதிரான தீவிர அரசியலை முன்னெடுக்க மநீமவுக்கு திமுக அசைன்மெண்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கமலுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க திமுக தயாராகியுள்ள சூழலில், அதற்கு கைமாறாக தவெகவை நேரடியாக எதிர்க்க களம் அமைக்கிறது.
விஜய்யை நேரடியாக எதிர்க்காமல் கூட்டணியை வைத்து சைலண்ட் ஆக்க திமுக தயாராகியுள்ளது.