பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் ரயிலை பலூச் கிளர்ச்சியாளர்கள் கடத்தியதில் சுமார் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 104 பயணிகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி சுமார் 400 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸை துப்பாக்கிதாரிகள் தடுத்து நிறுத்தி, கடத்திச் சென்றனர். பணயக்கைதிகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.