நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல ஆய்விற்கு மாவட்ட ஆட்சியர் உமா சென்று கொண்டிருந்தார், அப்போது ராசிபுரம் வட்டம் போடிநாயக்கன்பட்டி, ஓணாண்கரடு பகுதியில் சாலை விபத்தில் காயம் அடைந்தவரை உடனடியாக மீட்டு அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடன் சென்று உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பார்வையிட்டார்.