பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று திரிசதி அர்ச்சனை பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.