நாமக்கல் மாவட்டம். , ஆவல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா). , திட்டத்தின் கீழ் ‘ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் மானாவாரி பகுதி மேம்பாடு‘’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்து ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் விவசாயத்தில் ஒரு பண்ணையத்தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களை கூட்டாக மேற்கொள்ளுதலே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுப்பொருள் மற்றொரு பண்ணைத்தொழிலுக்கு இடுபொருளாக மாறுவதால், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கின்ற நீர் வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெற்று வருடம் முழுவதும் வருவாய் கிடைக்க ஏதுவாகிறது என பயிற்சியளித்தார்.
அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். இரமேஷ் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள். கவிசங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வருகை புரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.