அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

68பார்த்தது
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மன் கோவிலில் சித்திரை மாத முதல் செவ்வாய் கிழமையை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி