பாஜகவுக்கு வாக்கு சேகரித்த பிரபல நடிகை

50பார்த்தது
நடிகை கஸ்தூரி மதுரை பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரசியல் விமர்சரகராக பேசி வரும் நடிகை கஸ்தூரி, இந்த தேர்தலில் திமுகதான் வெல்லும் என கூறியிருந்தார். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது அதிமுகவிற்கு அவர் ஆதரவு தருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவ்வாறு மாறி மாறி பேசிவரும் நிலையில் மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி