குஜராத்தில் தேர்தல் பிரச்சாரகர்களாக 40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் உள்ளனர். இந்த பட்டியலில் ராஜ்யசபா எம்பிக்கள் சஞ்சய் சிங், ராகவ் சதா மற்றும் சந்தீப் பதக் ஆகியோரின் பெயர்களை ஆம் ஆத்மி சேர்த்துள்ளது.