“இதுதான் உண்மையான செங்கோல்” - மோடிக்கு கமல் பதிலடி

64பார்த்தது
“இதுதான் உண்மையான செங்கோல்” - மோடிக்கு கமல் பதிலடி
தமிழகத்தை தாண்டி யாருக்கும் தெரியாத செங்கோலை, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைத்து பெருமைப்படுத்தியவர் மோடி என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அதற்கு கமலஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். கோயம்புத்தூர் திமுக வேட்பாளரை ஆதரித்து சூலூர் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், “ஏதோ நகைக்கடையில் செய்த செங்கோலை கையில் பிடித்துக் கொண்டிருப்பது செங்கோல் அல்ல. மக்கள் ஒவ்வொரு கைகளிலும் இருக்கிற விரல் தான் செங்கோல்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி