ஒரு முட்டை விலை ரூ.2.26 லட்சம்

79பார்த்தது
ஒரு முட்டை விலை ரூ.2.26 லட்சம்
ஜம்மு காஷ்மீரில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. மல்போரா கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நன்கொடை பெறும் போது முதியவர் ஒருவர் முட்டை கொடுத்தார். நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களை பள்ளிவாசல் கமிட்டியினர் ஏலத்தில் விட, அந்த முட்டையை ஒருவர் 70 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். தொடர்ந்து ஏலம் விடப்பட்டதால் முட்டை விலை அதிகரித்து ரூ.2.25 லட்சத்தை தாண்டியது. மொத்தம் ரூ.6 மதிப்புள்ள முட்டை ரூ.2,26,000க்கு ஏலத்தை முடித்ததாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி