நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் அதிகபட்சமாக பரமத்தி வேலூர் பகுதியில் 45 மி. மீட்டர் மழை பதிவானது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி. மீட்டரில்:
கலெக்டர் அலுவலகம்-16, திருச்செங்கோடு-15, மோகனூர்-14, நாமக்கல்-11, எருமப்பட்டி -5, சேந்தமங்கலம்-1. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.