நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள பேட்டை ஸ்ரீ புதுமாரியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பால் தயிர் மஞ்சள் இளநீர் பன்னீர் உள்ளிட்ட திவ்ய பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.