பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலை ஆதார விதை பண்ணை ஆய்வு

50பார்த்தது
பரமத்தி வட்டாரத்தில் நிலக்கடலை ஆதார விதை பண்ணை ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரத்தில் நடந்தை கிராமத்தில் முத்துசாமி என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை ஆதார விதை பண்ணை டிஎம்பி 14 மற்றும் சித்தம்பூண்டி கிராமத்தில் தமிழரசி அவர்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை ஆதார விதை பண்ணை வி ஆர் ஐ 9 ஆகிய விதை பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது விதைப்பண்ணையின் முக்கியத்துவம், பயிர்களின் எண்ணிக்கையை பராமரித்தல், ஜிப்சம் இடுதல் மற்றும் மண் அணைத்தலின் முக்கியத்துவம், நுண்ணூட்டச் சத்து மேலாண்மை, பூச்சி நோய் தாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டியதன் அவசியம், பூக்கும் சமயத்தில் நிலக்கடலை ரிச் அடிப்பதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தனர். ஆய்வின் போது பரமத்தி வட்டார உதவி விதை அலுவலர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி