பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே குப்பை மேட்டில் திடீர் தீ

1546பார்த்தது
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே குப்பை மேட்டில் திடீர் தீ
பரமத்திவேலூர் தாலுகா வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை கழிவுகளை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டாமல், கரூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் காவிரி பாலம் ராஜாவாய்க்கால் அருகே கொட்டப்பட்டு தீ வைத்து எரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் கழிவுகளை நாமக்கல் மாவட்ட நுழைவு வாயில் பகுதியான காவிரி பாலம் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்தது. இந்த குப்பைக்கு சிலர் தீ வைத்து விட்டு சென்றனர்.

குப்பையில் பற்றிய தீ மளமளவென எரிந்து புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் கடும் அவதிக்குள்ளாகின. மேலும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் சிரமப்பட்டனர். தீயை அணைக்க முடியாத வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி