தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம்

73பார்த்தது
தீர்வு காணப்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம்


குமாரபாளையத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் சம்பள விவகாரம் தீர்வு காணப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் தவிர, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் தரவில்லை என புகார் எழுந்தது. இதனால் நேற்றுமுன்தினம் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் குமரன் கவனத்திற்கு தெரியவந்தது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசி தீர்வு காணபட்டது. இது குறித்து ஆணையாளர் குமரன் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சியில் 87 தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பள நிலுவை இருப்பதாக தெரியவந்தது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசி, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி