பள்ளிபாளையத்தில் எம் பி யை முற்றுகையிட்ட பொதுமக்கள்

71பார்த்தது
பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையம் அக்ரஹாரம், களியனூர், சமய சங்கிலி அக்ரகாரம், களியனூர் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் களியனூர் பகுதி ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 34 குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு நீண்ட காலங்களாகவே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை.

எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திட்ட திட்ட முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்த ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷை முற்றுகையிட்டு, தங்களது குடியிருப்பு பகுதிக்கு மின் இணைப்பு வேண்டுமென கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த ஈரோடு எம்பி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமரசம் செய்தார்.

தொடர்புடைய செய்தி