குமாரபாளையத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

84பார்த்தது
குமாரபாளையத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் எஸ். எம். மதுரா செந்தில் தலைமை வகித்தார். தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜேகேஎஸ். மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி, மாவட்ட பொருளாளர் ராஜாராம், தெற்கு நகரப் பொறுப்பாளர் ஜி. எஸ். ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

குமாரபாளையம் நகரமன்றத் தலைவர் த. விஜய் கண்ணன் வரவேற்றார்.மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து, தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்துள்ளது என தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி ஆகியோர் பேசினர். நகரமன்றத் தலைவர்கள் நளினி சுரேஷ்பாபு, மோ. செல்வராஜ், துணைத் தலைவர்கள் கோ. வெங்கடேசன், பி. பாலமுருகன், முன்னாள் நகரச் செயலாளர் எம். செல்வம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி