சி. பி. எம். மூத்த நிர்வாகியின் நூற்றாண்டு விழா..

62பார்த்தது
சி. பி. எம். மூத்த நிர்வாகியின் நூற்றாண்டு விழா..
முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் சி. பி. எம் நிர்வாகியின் நூற்றாண்டு விழாகுமாரபாளையம் சி. பி. எம். சார்பில்  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் சி. பி. எம் நிர்வாகியின் நூற்றாண்டு விழா நடந்தது.
 குமாரபாளையம் சி. பி. எம். சார்பில்  முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியின்  நூற்றாண்டு விழா நகர குழு செயலர் சக்திவேல் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட குழு செயலர் கந்தசாமி பேசியதாவது:

முன்னாள் எம். எல். ஏ. வாக இருந்த போது தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற பணிகளை செய்து கொடுத்துள்ளார்.  வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வீடுகள் கிடைக்க உதவி செய்தார். தொழிலாளர் பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைத்து, தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் சுமுக உறவை ஏற்படுத்தினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

 மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், நகர குழு உறுப்பினர்கள் சண்முகம், கந்தசாமி, காளியப்பன், மாதேஸ், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி