குமாரபாளையத்தில் வை. கோ. பேச்சு

60பார்த்தது
நெய்வேலி என். எல். சி பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்ட போது தடுத்து நிறுத்தினேன். பிரதமராக இருப்பவர் யாரையும் மதிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் இந்த சூழலில் தமிழகத்தில் ரத்தமும் கண்ணீரும் சிந்தி, திராவிட இயக்ககத்தை பல தலைவர்கள் காப்பாற்றி உள்ளனர். தி. மு. க. வில் இருந்து என்னை நீக்கப்பட்ட போதிலும் என்னை வளர்த்த இயக்கம் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி திமுக இயக்கத்தை சாதரணமாக இயக்கமாக நினைக்க கூடாது. ,  

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் போது தமிழ் மொழிக்காக தீக்குளித்து உயிர் நீத்தவர்கள் பற்றியெல்லாம் மோடிக்கு தெரிய நியாயமில்லை. , இந்தி எதிர்ப்பு போராட்டத்தை துட்சயமாக நினைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி திராவிட இயக்கத்தினை அழிக்கும் வழியில் இறங்கினால் நீங்கள் அழிந்து போவீர்கள்.

100ஆண்டுகள் பாரம்பரிய கொண்ட கட்சியை அழிப்பது தான் பிரதமர் வேலையா, திட்டம் கொள்கை குறித்து பிரதமர் வாக்கு சேகரிக்க வேண்டும். தி. மு. க ஜல்லிக்கட்டு எதிர்த்ததாக பிரதமர் கூறுகிறார். இப்போது வரும், போது அவரது பேச்சை கேட்டுவிட்டுதான் வருகிறேன். அதனால்தான் சற்று தாமதம் ஆனது. ஜல்லிகட்டுவை தி. மு. க. எதிர்த்ததற்கு  ஒரு ஆதாரம் சொல்ல முடியுமா?   

ஜல்லிக்கட்டு தி. மு. க எதிர்த்தது என அப்பட்டமாக பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்.  நாடு முழுதும் சுற்றுபவன் நான்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி