கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் குஷ்பு

536பார்த்தது
கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் குஷ்பு
90ஸ்-களில் கதாநாயகியாக கலக்கி வந்த நடிகை குஷ்பு, திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். இந்நிலையில், சமீப காலமாக அம்மா-அண்ணி உள்ளிட்ட குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் பாஜக கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இவர், முழு நேர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை குஷ்பு தற்போது 8.55 கிலோ தங்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் 78 கிலோ வெள்ளிக்கு சொந்தக்காரர் என்றும், 4.55 கோடி அசையா சொத்துகலை வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தங்க விலை ஏற்றம் கண்டுள்ளதால், இவரது சொத்துமதிப்பு 7 கோடியாக உயர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி