ரோடு ஷோவில் நடனமாடிய மம்தா பானர்ஜி

51பார்த்தது
மேற்கு வங்க மாநிலத்தில் ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி திடீரென நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது. ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மம்தா இன்று சிலிகுரி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், நடன கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி