குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25ம் ஆண்டு கார்கில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25ம் ஆண்டு கார்கில் வெற்றி விழா முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரி ப்ரிகாடியர் ரவிவர்மன் பங்கேற்று, கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் ஆத்மா சாந்தி பெற மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தது, கார்கில் போர் நடத்த போது நடத்த சம்பவங்களை மாணவ, மாணவியரிடம் பகிர்ந்து கொண்டார். அதன்பின் மாணவ, மாணவியர் அனைவரும் எழுந்து நின்று சல்யூட் செய்தனர். கார்கில் போரில் உயிர் நீத்த அவர்களுக்கு மவுன அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், பி. டி. ஏ. நிர்வாகிகள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.