குத்தாலம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படுமா

63பார்த்தது
குத்தாலம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படுமா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகம் குத்தாலம் ஊராட்சிக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும், 900-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கும், 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் 10 ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. கிராமங்களை காக்க வேண்டிய நிர்வாக அலுவலகத்திலேயே மின் இணைப்பு இல்லாமல் இப்படியொரு நிலை என்றால் கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு எப்படிச் சென்றடையும் என அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குத்தாலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி