நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஆக.29) இரவு விட்டுவிட்டு சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. குறிப்பாக நாகை, வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றத்தை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மக்கள் மழையில் சிக்கிக் கொண்டு பெரும் அவதி அடைந்தனர். வாகனங்கள் சாலையில் சேற்றில் புதைந்ததால் ஜேசிபி வாகனங்கள் கொண்டு வாகனத்தை வெளியே எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.