திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்காக ரூ.290 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த 17ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசாணை வெளியிட்ட 2 நாட்களில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது.