தஞ்சை நகரில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பாலநேந்திரம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சை கோர்ட் சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (17ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆபிரகாம் பண்டிதர் நகர், மேலவீதி, தெற்குவீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்த பிள்ளைகேட், மகர் நோம்புசாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சோழன் நகர், கல்லனை கால்வாய் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், கீழவாசல் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், அரிசிக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழையபேருந்து நிலையம், கொண்டிராஜ பாளையம், மகளிர் காவல் நிலையம், ரயில்வே காலனி, வ. உசி நகர், திருச்சி சாலை, நடிகர் சிவாஜி ரவுண்டானா, மேரீஸ் கார்னர், கல்லுகுளம், பூக்காரத்தெரு, அன்புநகர், மாரிகுளம், இருபதுகண் பாலம், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.