கிருஷ்ணகிரி: ஒசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் செட்டிப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் பணி முடிந்து வெளியில் வந்த 5 பெண்கள் நேற்று சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ யாதவ் (22), சந்தா (21) என்பது தெரியவந்தது. படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.