பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினில் இருந்து 'பாதாம் பிசின்' தயாரிக்கப்படுகிறது. இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பாதாம் பிசினை பால் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். மேலும் மனச்சோர்வு, பதட்டம், பலவீனம் போன்ற மன நிலைகளை குறைக்க இது உதவுகிறது.