சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் - சாந்தி தம்பதிக்கு கடந்த 2021-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மருத்துவ பரிசோதனை செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனதளவில் பாதிக்கப்பட்ட சாந்தி அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 17) அவர் தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.