கேரளா: பத்தனம்திட்டா அருகே கார் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதிகள் மற்றும் அவர்களது தந்தையரின் இறுதிச்சடங்கு இன்று (டிச., 19) நடைபெறவுள்ளது. மல்லச்சேரியை சேர்ந்த நிகில், அவரது மனைவி அனு, அனுவின் தந்தை பிஜூ ஜார்ஜ், நிகிலின் தந்தை எய்பன் மத்தாய் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். இதில், நிகில், அனுவின் உடல்கள் ஒரே கல்லறையில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.