கபாலி, அழகுராஜா, தோனி போன்ற படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே அண்மையில் பெண் குழந்தைக்கு தாயானார். அவர் அளித்த பேட்டியில், "குழந்தை பெற்று கொள்வது குறித்து நானும் கணவரும் யோசிக்கவில்லை, கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் பயங்கரமாக ஷாக் ஆனேன். கர்ப்ப காலத்தில் எனது உடல் எடை அதிகரித்ததால் உடலை பேணுவதற்கு கஷ்டப்பட்டேன். அவ்வளவு எடையுடன் என்னையே நான் அதுவரை பார்த்தது இல்லை" என கூறினார்.