திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

51பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருக்கோலக்கா தெருவில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத உற்சவம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக அர்ஜுனன் திரௌபதி திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக திரளான பக்தர்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் தெருவாசிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி