நகர்ப்புற மக்களை போல், கிராமப்புற மக்களும் அதிவேக இணையதள சேவையை பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு, பாரத் நெட் மூலம் அதிவேக இணையதள சேவையை வழங்க திட்டமிட்டது. அதற்காக கிராமங்களில் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டன. இப்போது வரை சுமார் 950 கிராமங்களில் இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளன. எனவே அந்த கிராமங்களில் தனியார் ஆபரேட்டர்கள் உதவியுடன் இணையதள சேவை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கிராமங்களில் அதிவேக இணையதள சேவை வழங்கப்படும் என தெரிகிறது.