ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமானதும், சுமார் 2,850 கி.மீ நீளம் கொண்ட நதியுமான 'டான்யூப்' நதி சுமார் 10 நாடுகளை கடந்து செல்கிறது. ஜெர்மனியில் டோனாஷிங்கன் நகருக்கு அருகே பிளாக் ஃபாரஸ்ட் மலைத்தொடரில் இந்த நதி உருவாகி தென்கிழக்கில் சென்று கருங்கடலில் கலக்கிறது. ஜெர்மனியில் தொடங்கி ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, மால்டோவா, உக்ரைன் மற்றும் ருமேனியா ஆகிய 10 நாடுகளை கடந்து இந்த நதி கடலில் கலக்கிறது.