முதல் முறை காலை 6 மணி, மாலை 6 மணி, 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். 2-வது முறையில் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 6 கி.மீ தொலைவு, 6 கி.மீ வேகத்தில் நடக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு நாளைக்கு 6 முறை நடக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 6 நிமிடங்கள் நடக்க வேண்டும். முதல் 2 முறைகளைக் காட்டிலும் 3-வது முறைக்கு அதிக நேரம் தேவையில்லை. எல்லோரும் எளிதாக வீட்டிலேயே பின்பற்ற முடியும். எனவே 3-வது முறையே பயன்படுத்தியாவது நடக்க முயற்சி செய்யுங்கள்.