மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி உப்பனாற்றில் கடல் தண்ணீர் புகுவதை தடுக்கவும், நல்ல தண்ணீரைத் தேக்கவும் ரூபாய் 30.96 கோடியில் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இருப்பினும் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் 30 கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.