மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையாறு கடற்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி வனத்துறையுடன் இணைந்து அஞ்சல் துறை சார்பில் தூய்மை பணியை நேற்று மேற்கொள்ளப்பட்டது. மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தலைமையில் அஞ்சலக அலுவலர்கள் ஒன்றிணைந்து தூய்மையின் முக்கியத்துவத்தையும், கடல்வாழ் உயிரினங்களின் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக கடற்கரையில் நெகிழிப் பொருட்கள், காகிதங்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மை செய்தனர்.