மகாராஷ்டிரா: பிம்பரி-சின்ச்வாட் நகரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பெண்ணை அவரின் மாமனார் சீரழித்திருக்கிறார். இது அவர் கணவரின் ஒப்புதலுடன் நடந்ததோடு இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவரின் கணவர் மற்றும் மாமனார் நேற்று (டிச. 07) கைது செய்யப்பட்டனர்.