அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 210 மாணவர்கள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே வரைந்து வண்ணம் தீட்டி அவற்றை இணைத்து 83 நிமிடங்களில், 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவத்தினை உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்விற்கு பள்ளி தாளாளர் சிவ சங்கர் தலைமை தாங்கினார். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி