சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 200க்கும் மேற்பட்டோர் பலி

54பார்த்தது
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மியான்மரில் 3 முறை அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 180ஐ தாண்டியது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதே போல் தாய்லாந்திலும் பலர் உயிரிழந்துள்ளனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் மளமளவென சரிந்து விழுந்தன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி