ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பஜார் பகுதியில், கார்த்திகா என்ற பெண் இ-சேவை மையம் நடத்தி வந்தார். அவர், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் கடன் பெற்று தருவதாக கூறி 33 பேரிடம் சுமார் ரூ.4 லட்சம் வரை பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர், சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து இ-சேவை மையத்திற்கும் சீல் வைக்கப்பட்டு, அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.