நெல்லை காந்திமதி யானைக்கு உடல்நலக்குறைவு

55பார்த்தது
நெல்லை காந்திமதி யானைக்கு உடல்நலக்குறைவு
நெல்லை மாநகரில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் திருக்கோயிலில் உள்ள காந்திமதி யானை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இது குறித்து அந்த யானையை பராமரிக்கும் பாகன் அளித்த தகவலின்படி, காந்திமதி யானைக்கு காலில் லேசாக புண் இருந்தது. அது தற்பொழுது சரியாகிவிட்டது. காந்திமதி யானை நல்ல நிலையில் உள்ளது. வயது முதிர்வு காரணமாக வெளியில் அவ்வளவாக நடமாட்டம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி