மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெரம்பூர், பாளையூர், மங்கநல்லூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, மல்லியம், கோமல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் ஆறுகள், வடிகால்கள் நிரம்பி விளைநிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.