மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை அளவில் பட்டாசு விற்பனையாளர்களுக்கான தீத்தடுப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி முகாமில் தீ விபத்து ஏற்பட்டால் கையாளும் நடைமுறைகள் குறித்து பட்டாசு கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.